இடுகைகள்

நோய்க் கூறு 2

படம்
 அறிவியலும் அரசும் தொற்றும் மீறி நம்பிக்கைக்கு உரியதாக இவ்வாழ்வைத் தேற்றுகிறேன் யசோதா... நீ கானல் நீரில் இளைப்பாறுவதாக புன்னகைக்க வேண்டாம் தூரத்தில் கடைந்தெடுக்கப்படும் நஞ்சு நம்மிலிமிருந்தும் என்றாகட்டும்... -பாரதிநிவேதன்

சேரி - கவிதை பின்னம்

படம்
 என்னவோ எழுதிக் கொண்டிருந்தேன். அதில் பொறுத்து என்ற சொல்லில் று சரியா ரு சரியா என்பதில் சிக்கிக் கொண்டேன். எதிலிருந்து எதற்குள் தப்பிக்க என்ற நேர்ச்சையைக் கைவிட்ட பிறகு வாழ்க்கையோட்டத்தின் நிலையில் எண்ணம் புள்ளியாகி மயக்கம் வரும் பொழுதில்   எல்லாம் கடந்து போகும்…பெருமூச்சிற்குப் பிறகு ‘உன்னவ லட்சுமீ நாராயணா’ எழுதிய சேரி நாவலின் தமிழாக்கத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இது தாமரைபாரதியின் தபுதாராவின் புன்னகை கவிதை நூலுக்கு சிறு குறிப்பு முகநூலில் எழுத வேண்டும் என்ற எண்ணத்திற்கும் ஆனால் கிடைக்காத ஓர்மைக்கும் இடையில் நடந்தது. சேரி நாவலின் போக்கில் ஒரு பகுதி இப்படி வருகிறது. “நிராகாராம் (அருவம்) சாகாரம் (உருவம்) எதற்காக ஆனது?” “எப்படியாயிற்றென்ற விஷயத்தை ரிஷிகள் மிக விஸ்தாரமாக சர்ச்சித்திருக்கிறார்கள் என்றாலும் எதற்காக ஆனது என்கிற விஷயம் மனித அறிவுக்கு தெளிவாகத் தெரியவில்லை. இறைவன் திருவிளையாடல் என்று மட்டும்தான் சொன்னார்கள்.” “எந்தவிதமான உபாசனை சிறந்தது” “நோய் தீர்த்ததுதான் மருந்து. தத்துவத்தைப் பொறுத்திருக்கும். சிலர் பரத்துவத்தினால் விஸ்வ வியாபகமாக இருக்கும் அவரைக் கண்டார்கள். புராணங்களை

அலகில் சிக்காத கடல்

படம்
 Mayir.in இதழுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.....பாரதி நிவேதன் 15.5.21 ______________________ அலகில் சிக்காத கடல் 1. நீங்கள் என்னை அந்த தெருமுனையில் பார்க்கலாம்  இறைவனின் கள்ளாகவும் ஊமைச்சாராயமாகவும் தேசப்பிதா பவனி வரும் காலத்தில் உள்ளூர அமைதியும் வெளியே கலவரமும் தொடுத்த என்னைப் போன்ற சிறுபான்மை கடவுளர்களை உங்களால் சகித்துக் கொள்ள எந்தக் கோடை மழையும் உதவப்போவதில்லை ஆனால் மாலுமிகள் அற்ற கப்பல்கள் மழைநீர் வடியும் முன் கடந்துவிடுகின்றன நேற்றுதான் பெய்ததுபோல் இருக்கிறது அந்த மழை                  இந்த வண்ணத்து பூச்சிகளால் இந்த மரங்கொத்தி கதவில்லாத வீட்டைக் தட்டிக் கொண்டே இருக்கிறது ஒருபோதும் நான் திரும்பப் போவதில்லை 2. என் வீட்டிற்கு யாழினி வந்திருந்தாள் ஒருசெல்லிடைப்பேசியால் தொலைந்து போய் விட்டாள் இறைவனின் கள் இப்படித்தானாம்  கைமீறி போய்விட்டதால் கல்லுக்குள் தரித்துக் கொண்டது தேரை எனக்குள்ளேயே கரை காணாமல் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறேன் எங்கிருந்து பிரிவது பிறகு எதைக்கொண்டு சுழல்வது அழித்தொழிக்கப்பட்ட பொம்மைகளிலிருந்து உயிரைப் பிடித்துக் கொண்டு வடிவெடுக்கத்தான் வேண்டும் மழைக்கு முளைத்த

சில புகைப்படங்கள் நேசமித்திரன் ஸ்‌ரீசங்கர் பாரதிநிவேதன்

படம்

நோய்க்கூறின் காலம்

படம்
 

சிறுகதை

படம்
  அடுக்குகளின் உள்வெளி பாரதிநிவேதன்     சி த்தர்களோடு இணைவதற்கான தகுதிகளைப் பெற்றுக்கொண்டு வருகிறாய் வனா. மூக்கில் வாயில் உறிஞ்சி மூளை மின்னாற்றல் மிக்கதாகவும் அதில் ஒரு குடிலை உருவாக்கிக் கொள்ளவும் எங்களுக்கு வாய்த்து இருந்தது. ஆனால் நீ திரவத்தின் வழியாக வந்து சேர்ந்திருக்கிறாய். இந்தப் பாதை விஷத்தன்மை உடைய அதே அளவுக்கு அந்த விஷத்தைத் தங்களது உடலால் முறியடிப்பவர்களுக்கு அது சொர்க்கத்தின் பக்கத்தில் அமுதமாகவும் இருக்கிறது.  இடையே இடையே இப்படி நீ யார் என்ன ஏது என்று கேட்டுக் கொண்டிருக்காதே வனா. நான் இப்போது ஒரு சிலந்தி வலையைப்போல் இழையைப் பின்னிக் கொண்டிருக்கிறேன். நீ அறுத்துவிடாதே. சாமான்யனின் கேள்விக்கு அறுந்துபோகக் கூடிய இழையா உன்னுடையது என்றும் கொக்கரித்துவிடாதே. எனக்கு ஒன்றும் அதனால் பிரச்சினை இல்லை. இழை அறுந்தால் பாதிக்கப்படப் போவது நீ. முதலில் நீ உன்னுடைய பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். அதன் மூலமே சமநிலையுடைய பாத்திரம் ஒன்றை நாம் கையாள முடியும். இப்போது நீ மயக்கமுறுத்தும் ஏவலுக்கு ஆளாகி இருக்கிறாய். அது உண்மைதான். அந்த மந்திரங்கள் உச்சரிக்கப்படும்போது உனது உடலும் கூனிக் குற

விவேகானந்தர்

படம்
  சுவாமி விவேகானந்தர் மொழிந்த ஆன்மீகம் ___________________________________ நல்லதைச் செய்து முடிக்க அல்லதை விடுக்க உள்ளத்தில் வைரம் பாய்ச்ச வேண்டும் வல்லது எதுவென்றால் பூமியாக மாறுதல் தள்ளாது எதையும் தாங்குதல் அன்பை வெறுப்பதும் நம்பியவரை ஏமாற்றுவதும் தன்னைத் தலைகீழாய்ப் பிடிப்பதற்குச் சமம் உழைக்காமல் இருப்பது துருப்பிடித்தலுக்குச் சமம் பிழைப்பதற்குத் தேவை நீ விளக்கென்று அறிவதே ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை தேடுவது சொல் அல்ல உன் செயல் முடைவதே உன் வேலை அடைவதல்ல உடைப்பது உன் வேலையல்ல உடையாமலிருப்பது மூடநம்பிக்கை முட்டிக்குக் கீழ் இருக்க வேண்டும் - நீ தேடகிடைக்காத அளவுக்கு தர்மத்தின் உயரமாக வேண்டும் வாழ்க்கை துயரம் என்பது பட்டறிவாகலாம் - நீ   சீழ்க்கை அடிக்கும் போதே அதில் மகிழ்ச்சி துள்ளலாம் சொட்டும் மெளனம் மூலாதாரத்திற்குத் தேவை - நீ   கொட்டும் மெளனம் வாழ்வாதாரத்திற்குத் தேவை தத்தளிப்பிற்குப் பிறகே ஒளி வரும் - நீ தத்தி நடந்து காற்றாகும்போதே கவலை அறும் உனக்குள்ளான தீபம் ஊருக்காக ஆகட்டும்   தனக்குள்ளான தானம் தாரா